முதன்மை செய்திகள்

Kaala Review: காலா விமர்சனம்


கரு: மும்பையில் தாதாவாக இருக்கும் காலா, தனது மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நில மாஃபியாக்களை எதிர்த்து நடத்தும் யுத்தமே ‘காலா’ திரைப்படத்தின் மையக்கரு
Image result for 3.5 rating
3.5 / 5
ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்தின் படம் என்றால் கேட்கவே வேண்டாம், பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இருப்பது கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படுகிறது. ரஜினியின் கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித், காலாபடத்தை பொழுதுபோக்கு, அனல் பறக்கும் வசனம் என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளார். 


ரஜினிகாந்தை அவருக்கே உரிய ஸ்டைல், வசனங்கள் இல்லாமல் படத்தில் பார்ப்பது என்பது வெறுப்பாகவும் போராகவும் தான் இருக்கும். ஆனால், பா.ரஞ்சித் அனைத்தும் கலந்து, இன்றைய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும், காலா படத்தில் வழங்கி கலக்கியுள்ளார். காலா படத்தில் ரஜினியின் திறமையை வேறுவிதமாக கையாண்டு இருக்கிறார் ரஞ்சித். இன்றைய ரசிகர்களுக்குத் தேவையானவற்றை எப்படி ரஜினியிடம் வரவழைக்க வேண்டுமோ அதை சரியாக கொண்டு வந்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. 

ரஜினிகாந்தின் படத்தில் அவர் மட்டும்தான் அனைத்துமாக இருப்பார். அந்தளவிற்கு அவரது ஆளுமை படத்தில் இருக்கும். அவரது நடிப்பு ஆளுமையை ஒவ்வொரு சீனிலும் பார்க்கலாம். காலா படத்தில் அனைத்தும் கலந்து, சூப்பரான நடனம், பாடல் என்று ரஞ்சித் அசத்தியுள்ளார். 

தொழில்நுட்பம் ஆகட்டும், நடனம், பாடல், குடிசைப் பகுதி செட் அமைத்து இருப்பது, ஆர்ட் என்று அனைத்தும் காலா படத்தில் பிரமாதமாக அமைத்துள்ளார் ரஞ்சித். எடிட்டிங் பேச வைக்கும், அந்தளவிற்கு துல்லியமாக எட்டி செய்யப்பட்டுள்ளது. 



படம் முழுக்க உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருப்பார் ரஜினி என்பதில் சந்தேகமில்லை. ரஜினிகாந்த் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நானே பாடகரின் நடிப்பு அற்புதம். ஹூமா குரேசி குறிப்பிடும்படி பிரமாதமாக நடித்துள்ளார். அனைத்து துணை நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர். 

ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமானால், ரஜினிகாந்த்தின் காலா அவருக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக, சூப்பர் டூப்பர் வசூல் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் சரித்திரம் படைப்பார் ரஜினிகாந்த்!! 


இயக்கம்: 
முந்தைய கபாலி படத்தைப் போல் இல்லாமால், இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்குநர் ரஞ்சித் முழுமையாக பயன்படுத்தியுள்ளார். ரஜினியின் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் கலந்து படத்தை கச்சிதமாக ரஞ்சித் எடுத்துள்ளது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே இருக்கும். 

அரசியல் பேசும் காலா: 
படத்தில், அரசியல்வாதியின் ‘டிஜிட்டல் தாராவி’ மற்றும் ‘ப்யூர் மும்பை’ உள்ளிட்ட திட்டங்கள், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மற்றும் கிளீன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ரஜினியை ஒரு ராவணனாகவும் வில்லனை ராமரைப் போன்றும் சித்தரித்து, மத்திய அரசின் மதவாத அரசியலை கிழித்து தொங்கவிட்டுள்ளது காலா 

தொழில்நுட்பக் கலைஞர்கள்: 
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பின்னணி இசையில் பிரித்து எடுத்துள்ளார். ரஜினியின் மாஸ் சீன்களை, ரஜினி வரும் காட்சிகளில் அவரது இசை, புல்லரிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாடல்கள் அனைத்தும் செம்ம வெயிட்.
ஒளிப்பதிவைப் பொறுத்தவரை ஒளிப்பதிவாளர் முரளி வண்ணங்களை சரியாக கையாண்டுள்ளார். படத்தில் கருப்பு வண்ணம் முக்கிய பங்காற்றுவதால் அதை சரியாக காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல், வில்லன் வரும் காட்சிகளில் வெள்ளை வண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 

நடிப்பு: 
நடிகர் ரஜினி தனது நடிப்புத் திறன் முழுவதையும் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்றே கூறலாம். காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இதுதவிர, ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் மற்றும் ரஜினி மகனின் காதலியாக வரும் அஞ்சலி பாட்டில் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. 

இது ஒரு அரசியல் கருத்துக்களை பேசும் படம் என்பதை ’காலா’ எந்த இடத்திலும் சமரசம் செய்துக்கொள்ளவில்லை. ‘கபாலியில்’ விட்ட சில இடங்களை ’காலா’வில் ரஞ்சித் செய்துள்ளார் என்றே தோன்றுகிறது. 

No comments