தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியில் நடந்த வீதிகளில் சிபிசிஐடி போலீசார் கடைகளின் விவரங்களை சேகரித்தனர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியில் நடந்த வீதிகளில் சிபிசிஐடி போலீசார் கடைகளின் விவரங்களை சேகரித்தனர் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர் . இதுதொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்
அதன் அடிப்படையில் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடப்பட்டு வருகின்றது . சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை வரவழைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கடந்த மே மாதம் 22-ம் தேதி மக்கள் பனிமயமாதா ஆலயத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளின் விவரம், உரிமையாளர்கள் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர். இதில் சுமார் 350–க்கும் மேற்பட்ட கடைகள் விவரம் சேகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தின்போது ஏதேனும் கடைகள் திறந்து இருந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்
No comments